அஸ்வின் நாக் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகாபடுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ஷோபனா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கல்கி 2898
கதை
கி.பி 2898-ம் ஆண்டு பல பேரழிவுகளுக்குப் பின் எஞ்சி நிற்கும் உலகின் கடைசி நகரமாக இருக்கிறது காசி. ‘காம்ப்ளக்ஸ்’ என்ற பெயரில், மிஞ்சியிருக்கும் இயற்கையைச் சுரண்டி, சர்வ வசதிகளும் கொண்ட தனி வாழ்விடத்தை அந்நகரில் உருவாக்கி, மக்களை அவ்வாழ்விடத்திற்கு வெளியே வறுமையில் வைத்திருக்கிறார் சுப்ரீம் யாஸ்கின் (கமல் ஹாசன்). சுப்ரீமிற்கும் காம்ப்ளக்ஸிக்கும் எதிராகப் புரட்சி செய்யப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஷம்பாலா என்ற ரகசிய நகரத்தைச் சேர்ந்த மக்கள். அந்த உலகத்தின் கரண்சியான ‘யூனிட்ஸ்’-ஐ தேடும் சேட்டைக்கார வீரனான பைரவா (பிரபாஸ்), எப்படியாவது காம்ப்ளக்ஸிற்குள் சென்று செட்டிலாக வேண்டும் என்று முயல்கிறான்.
மறுபுறம், கர்ப்பிணியாக உள்ள SUM 80-ஐ (தீபிகா படுகோன்) குறி வைக்கிறார்கள் சுப்ரீமின் ஆட்கள். அதனால், அப்பெண்களைப் பிடித்து சுப்ரீமின் ஆட்களிடம் கொடுக்க பைரவாவும் களமிறங்குகிறான். மறுபுறம், குருச்சேத்திரப் போர் நடந்த காலத்திலிருந்து உயிரோடிருக்கும் அஸ்வத்தாமனும் (அமிதாப் பச்சன்), ஷம்பாலா நகரத் தலைவியும் (ஷோபனா) அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். அப்பெண்ணுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு, இறுதியில் அப்பெண்ணுக்கு என்ன ஆனது, உண்மையில் பைரவா யார் போன்ற கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியிருக்கிறது இயக்குநர் நாக் அஷ்வினின் ‘கல்கி 2898 ஏடி’
சண்டைக்காட்சிகள், நடிப்பு என பிரபாஸ் சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார் அமிதாப் பச்சன். தீபிகா படுகோன் நடிப்பும் சிறப்பு. சில காட்சிகளே வந்தாலும் கமல்ஹாசன் நடிப்பு அருமை.
சஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, பசுபதி, அன்னா பென் , மிருணாள் தாக்கூர், திஷா பதானி, பிரம்மானந்தா இவர்கள் தவிர. துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, இயக்குநர்களான ராஜமொலி, ராம் கோபால் வர்மா, அனுதீப் என ஒரு பெரிய பட்டாளமே கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்சின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் நடக்கவிருக்கிறது.
கீர்த்தி சுரேஷின் குரலில் வரும் புஜ்ஜி என்கிற அதிநவீன ஏ.ஐ கார் போன்ற சில ரசிக்க வைக்கும் ஐடியாக்களும் ரசிக்கும்படி உள்ளது.
மகாபாரத புராணக் கதைகளுடன், ரோபோக்கள், ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதையை மிகவும் சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி மிகப் பிரமாண்ட படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் நாக் அஷ்வின். பாராட்டுக்கள்