69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வெளியாகியிருக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’
கதை
ஒரு கொலை குற்றவாளி கதாபாத்திரம் கொலையை கலையாகப் பார்க்கிறார். அவரிடம் எழுத்தாளர் சென்று அவரின் கதையை கேட்கிறார். அவர் நடந்த கொலைகளை விரிவாக சொல்கிறார். அவைகளை சுவாராஸ்யமாகசொல்வதே படத்தின் மீதிக்கதை.
இப் படத்தில் புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அமைதியான பேச்சு ஆழமான நடிப்பு என அசத்தலாக நடித்திருக்கிறார்
மாறன் கதாபாத்திரத்தில் ஒருவர் ஜெகதீஷை எப்படி ஆட்டி படைக்கிறார் அதில் ஜான் விஜய் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்
குரு சோமசுந்தரம் போலீசை அடித்து நொறுக்கும் காட்சி விசில் சத்தம் கேட்கிறது ஹரிஸ் ஊத்தமன் ஜட்டியோடு தன் மனைவியிடம் வந்து நான் உத்தமன் எந்த தவறும் செய்யவில்லை என்று வாதாடும் போது அவரது மனைவி திவ்யா பாரதி அவரை விட்டுப் பிரிகிறார் அந்த காட்சியும் ரசிக்க வைக்கிறது
இப்படத்தின் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம் வினோத் சாகர் கபிலன் என்ற எழுத்தாளராக வந்து ஜெகதீசன் கொலைகள் செய்தது நியாயமா என்று கேட்கிறார் இவர் ஒன்று சொல்ல அவர் ஒன்று சொல்ல எதிர்மறையாகவே போய்க்கொண்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்
ஹரிஷ் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது அவர்தான் இளமைக்கால ஜெகதீஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்பிரவின், நந்தா இருவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். கே வின் இசை படத்தை ரசிக்க வைக்கிறது
தயாரித்த இயக்கி இருக்கும்
இயக்குனர் ராகுல் கபாலி கபாலி படத்தை வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் தமிழ் சினிமாவில் வழக்கமான மசாலா படங்கள் போல் இல்லாமல் ஹாலிவுட் படங்கள் போல் எடுத்துக்கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதமாக அணுகி அவர்கள் செய்த செயலை பாத்திரப்படைப்பாக சொல்லி யிருக்கிறார் மொத்தத்தில் இந்த பயமறியா பிரமை ஒரு வித்தியாசமான அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமாவை எடுத்துப் போகும் புதுமையான சினிமா
படமாக வந்துள்ளது புதுமையை விரும்புவர்கள் இதை நிச்சயம் ரசிப்பார்கள்
தமிழ் சினிமாவை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற படைப்பை கொடுத்திருக்கும் இயக்குருக்கு
வாழ்த்துக்கள்