J M P R O D U C T I O N S
P R I V A T E L T D
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்
கோவை S P மோகன் ராஜ்
மற்றும்
ஜெயஶ்ரீ விஜய்
தயாரிப்பில்…
இயக்குனர்
விஜய் ஶ்ரீ. G
இயக்கத்தில்…
இசையமைப்பாளர்
இரசாந்த் ஆர்வின்
இசையில்…
ஒளிப் பதிவாளர்கள்
பிரகாத் முனுசாமி,
மனோ தினகரன்,
மற்றும்
மோகன் குமார்
ஒளிப்பதிவில்…
மோகன்
அனுமோல்,
யோகிபாபு,
சாருஹாசன்,
சுரேஷ் மேனன்,
பழ கருப்பையா,
வனிதா விஜயகுமார்,
சாமஸ் விஸ்வநாதன்
சிங்கம் புலி,
மொட்டை ராஜேந்திரன்,
மனோ பாலா
தீபா,
மைம் கோபி,
சந்தோஷ் பிரபாகர்,
சாய் தீனா,
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்…
ஹரா
கதை
கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன். கல்லூரி படித்துக் கொண்டிருந்த தனது மகள் நிமிஷா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகளின் தற்கொலைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்களைத் தேடிச் செல்கிறார் மோகன். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பணத்திற்காக தனியார் போலி மாத்திரை நிறுவனங்களை ஆதரிப்பது, கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்பட வற்புறுத்துவது இவை எல்லாம் சேர்ந்து தன் மகளின் தற்கொலைக்கு காரணமாவதை தெரிந்துகொண்டு இறுதியில் தன் மகளை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை
தமிழ் சினிமாவின் காதல் நாயகனாக கலக்கிய மோகன் இப்படத்தில் ஒரு தந்தையாக, ஆக்ஷன் ஹிரோவாக சிறப்பாக நடித்துள்ளார்.
மோகனின் மனைவியாக அனுமோல், வில்லனாக சுரேஷ் மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், மைம் கோபி என எல்லோருமே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்திருக்கிறார்கள். பத்திரிக்கையாளர் கோடங்கியின் மகன் சந்தோஷ் பிரபாகர் நன்றாக நடித்துள்ளார்.
ரஷாந்த் அர்வினின் இசை ரசிக்க வைக்கிறது. பிரகாஷ் முனுசாமி
மனோ தினகரன்,
மற்றும்
மோகன் குமார் மூவரின்
ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
பழிவாங்கும் கதையில் தீவிரவாதம், மத நல்லிணக்கம், மருந்துகளில் கலப்படம்
மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழல் என எல்லோரும் ரசிக்கும்படியான படத்தை சுவாராஸ்யமாககொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ. பாராட்டுக்கள்