Take a fresh look at your lifestyle.

Anjamai movie Review

444

அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில்  திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்து. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் மற்றும் பலர் நடித்து ஜூன்7 ல் வெளியாகும் படம் அஞ்சாமை

கதை

திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் கூத்துகலைஞராகவும் விவசாயியாகவும் வாழ்பவர் சர்க்கார். பள்ளி படிக்கும்போது மருத்துவராக ஆசைப்படும் அவரது மகன் கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார். மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக்காக வயல், மாடு என விற்று படிக்க வைக்கிறார். சாதாரண விவசாயியான சர்க்கார் மகன் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு எழுத ஜெய்ப்பூருக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது அவர்களை அந்த நுழைவுத்தேர்வு எவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்குகிறது? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்களை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர்? அவர்களுக்கு ரகுமான் எவ்வாறெல்லாம் உதவுகிறார்? என்பதே படத்தின் மீதிக் கதை

மகனின் டாக்டர் ஆசையை நிறைவேற்றும் தந்தை கேரக்டரில் விதார்த் வாழ்ந்து இருக்கிறார். சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். விதார்த் மனைவியாக வாணி போஜன். தாயாக கிராமத்து பெண்ணாக கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். மகனாக நடித்துள்ள கிரித்திக் மோகன் நடிப்பு சிறப்பு.
நீதிமன்றத்தில் ரகுமான் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும், இந்த மக்கள் நமது அரசாங்கத்தின் முன்வைக்கும் நியாயமான கேள்விகளாகவே உள்ளது. ரகுமான் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். ராமர் மற்றும் இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ராகவ் பிரசாத் இசை ரசிக்க வைக்கிறது கார்த்திக் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம்.

மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தியதால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தாக்கத்தையும், அதனால் பறிபோன உயிர் எண்ணிக்கையும் கருவாக கொண்டு அதற்கு சுவாராஸ்யமாக திரைக்கதையமைத்ததோடு
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பட்ட இன்னல்களையும், இந்த நீட் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர் மையங்கள் எப்படியெல்லாம்பணம் சம்பாதிக்கின்றனர் என்பதையும் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் சுப்புராமன்

எல்லோருயம் ரசிக்கும்படியான நல்ல படத்தை கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள்