ராமராஜன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சாமானியன்.
கதை
மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து சங்கர நாராயணனும் (ராமராஜன்) அவரது நண்பர் மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். மறுநாள், தியாகராயர் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்குப் போகும் சங்கர நாராயணன், வெடிகுண்டையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி, அவ்வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார்.
மறுபுறம், அவ்வங்கி கிளையின் மேலாளரின் வீட்டை மூக்கையாவும், துணை மேலாளர் வீட்டை ஃபாஸில் பாயும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். மூன்று சீனியர் சிட்டிசன்களின் சீற்றத்திற்கு என்ன காரணம், இம்மூவரின் பின்னணி என்ன, இறுதியில் பிணைக்கைதிகளாக இருப்பவர்களைக் காவல்துறை மீட்டதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது இயக்குநர் இராகேஷின் ‘சாமானியன்’.
ராமராஜன் நன்றாக நடித்துள்ளார். மகளாக நக்ஷரா ராதாரவி ms பாஸ்கர் என எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள்
சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவு அருமை. இளையராஜாவின் இசையில் பாடல்களும்பி ண்ணனி இசையும் அருமை
பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படும் கடன் ‘வாராக்கடன்’ ஆக ஆவது போன்றவற்றை ஒன்லைனர்களில் கலாய்க்கிறது படம். அதேநேரம் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கடன் மீதான மோசமான பார்வையை, எவ்வித தரவுகளுமின்றி முன்வைக்கிறது படம். பார்க்கலாம்