ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி காஷ்மீரா, பாக்யராஜ், தியாகராஜன்,பிரபு, இளவரசு, ராஜா, பிரியதர்ஷினி, அனிகா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் PT சார்
கதை
ஈரோட்டிலிருக்கும் பெரிய கல்வி தந்தை (தியாகராஜன்) அவர் நடத்தும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார் கனகவேல் (ஹிப்ஹாப் ஆதி). சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் ஜாதகத்தில் பிரச்னை இருப்பதாக குடும்ப ஜோதிடர் எச்சரிக்கிறார். இதைக் கேட்கும் அவரது தாய், எந்த அநீதியையும் தட்டி கேட்காத வகையில் அவரை வளர்க்கிறார். பள்ளியில் உடன் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் வானதியிடம் கனகவேல் காதல் கொள்ள, அவர்களின் நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்படுகிறது. மறுபுறம் அவர்களின் எதிர்வீட்டிலிருக்கும் இளம்பெண் (அனிகா சுரேந்திரன்) பாலியல் ரீதியான சீண்டல்களைச் சந்திக்கிறார். அந்தப் பிரச்னையில் கனகவேல் உதவபோக அதனால் அவரின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன, அனிகாவின் பிரச்னைகளுக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஹீரோவாக ஆதி நடிப்பிலும் சண்டைகாட்சிகளிலும் நகரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியாககாஷ்மீரா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். வில்லனாக கல்விதந்தையாக தியாகராஜன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு, நீதிபதியாக பாக்யராஜ், இளவரசு என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மாதேஷ் மாணிக்கத்தின்ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
பாலியல் பிரச்சினையை கருவாக வைத்து எல்லோரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால். பாராட்டுக்கள்.