Take a fresh look at your lifestyle.

Siren108moviereviee

43

ஹோம் மூவி மேக்கர்ஸ்
வழங்கும்,
தயாரிப்பாளர்
சுஜாதா விஜய்குமார்
தயாரிப்பில்…
ரெட் ஜெயன்ட் மூவீஸ்
வெளியீட்டில்…
இயக்குனர்
அந்தோணி பாக்யராஜ்
இயக்கத்தில்…
இசையமைப்பாளர்
G.V பிரகாஷ் குமார்
இசையில்…
மற்றும்
சாம் C.S
பின்னணி இசையில்…
ஒளிப் பதிவாளர்
S.K. செல்வ குமார்
ஒளிப்பதிவில்…
பட தொகுப்பாளர்
ரூபன்
எடிட்டிங்கில்….
ஜெயம் ரவி,
அனுபமா பரமேஸ்வரன்
கீர்த்தி சுரேஷ்,
சமுத்திரகனி,
யோகி பாபு,
யுவினா,
அழகம் பெருமாள்,
அஜய்,
பாண்டியன்
மற்றும்
பலர்
நடித்து வெளியாகியிருக்கும் படம்
சைரன்

கதை

செய்யாத கொலைக்காக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் ஜெயம் ரவி தன் மகளை பார்க்கவும் தன் மனைவியை கொன்று தன்னை பிளான் செய்து சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பியவர்களை பழிவாங்கவும் 14 நாள் பரோலில் வெளியே வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி மகள் அப்பா கொலை செய்துவிட்டு சிறை சென்றதால் சிறு வயதிலிருந்தே அப்பாவை (ஜெயம் ரவி) வெறுக்கிறார்.
இந்த 14 நாள் பரோலில் தன்னை சிறைச்சாலைக்கு அனுப்பிய எதிரிகளை ஜெயம் ரவி கொன்றாரா? இல்லையா? மகள் மனம் மாறி அப்பாவான ஜெயம் ரவியை ஏற்றுக் கொண்பாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை

ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் டிரைவராகவம், கைதியாகவும் அப்பாகவும், காதலனாகவும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக மிரட்டலாக நடித்து கைதட்டல் பெறுகிறார். வில்லன்களாக சாதிவெறி கொண்டவர்களாக சமுத்திரக்கனி அழகம்பெருமாள்நன்றாக நடித்துள்ளனர். கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் சிறப்பாக நடித்துள்ளார். ஜெயம் ரவியின் மகளாக நடித்தவர் சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு வரும் காட்கள் அருமை. மற்றும் இதில் நடித்த துளசி,சாந்தினி , யுவானா பார்தவி,பிரவீர்ஷெட்டி, பவித்ரா லோகேஸ்,கௌசிக் மவுதா
என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
G V பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சாம் சி எஸ்ஸின் பிண்ணனி இசை படத்திற்கு படத்திற்கு பலம்.
ரூபனின் எடிட்டிங் ஷார்ப். S K செல்வக்குமாரின் ஓளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

தந்தை மகள் பாசத்தை அழகாக சொன்னதோடு
பழிவாங்கும் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக திரைக்கதையமைத்து வெற்றி படமாக கொடுத்துள்ளார்
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் வாழ்த்துக்கள்.