Take a fresh look at your lifestyle.

Max Movie Review

3

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், பிரமோத் ஷெட்டி, சுனில், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மேக்ஸ்.
 
கதை
 
கிச்சா சுதீப் சஸ்பென்ஷனுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர வருகிறார். அடுத்த நாள் காலை பணியில் சேர உள்ள நிலையில், முதல் நாள் இரவே இரண்டு அமைச்சர்களின் மகன்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த இருவரும் இறந்துவிட காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் பயப்படுகின்றனர். அமைச்சரின் மகன்களை தேடி பல ரவுடி கும்பல்கள் காவல் நிலையத்தை சுற்றி வளைக்கின்றனர். இறுதியில் காவல் நிலையத்தில் இருந்து பணியில் இருந்த காவலர்கள் தப்பித்தார்களா?  தங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன மாதிரியான வேலைகளை அவர்கள் செய்தார்கள்? கிச்சா சுதீப் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே மேக்ஸ் படத்தின் மீதிக்கதை.
 
தனது மாஸான நடிப்பின் மூலம் வெகுஜன ரசிகர்களையும் எளிதாக கவர்ந்து விடுகிறார் கிச்சா சுதீப். ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சினை வரும்போது அதனை அவர் கையாளும் விதம் சிறப்பாகவே உள்ளது. அதிரடி சண்டை காட்சிகளிலும், வசனங்களிலும் அனல் பறக்க நடித்துள்ளார் .வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், பிரமோத் ஷெட்டி, சுனில், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவு அருமை.
 
தனது முதல் படத்திலேயே இயக்குனர் விஜய் கார்த்திகேயா ஒரு மாஸ் கமர்சியல் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். கைதி படம் போன்ற ஒரே இரவில் நடக்கும் கதையை சுவாரசியமாக ஆரம்பம் முதல் இறுதிவரை கொண்டு சென்றுள்ளார். பாராட்டுக்கள்.
 
கிச்சா சுதீப்க்கு வெற்றி படம்