Take a fresh look at your lifestyle.

ZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது

10

ZEE5 தெலுங்கு பிளாக்பஸ்டர், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது
 
ZEE5 சுதீர் பாபு மற்றும் சாயாஜி ஷிண்டே நடிப்பில், அப்பா மகன் உறவைப் போற்றும், ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தினை பிரீமியர் செய்யவுள்ளது
 
~ மா நன்னா சூப்பர் ஹீரோ நவம்பர் 15 முதல் ZEE5 இல் பிரத்தியேகமாக பிரீமியராகிறது ~
 
~ V Celluloid தயாரிப்பில் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கத்தில், மா நன்னா சூப்பர் ஹீரோ திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான அப்பா-மகன் உறவைச் சொல்லும் படமாகும். இப்படத்தில் சுதீர் பாபு, சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் நடித்துள்ளனர். ~
 
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, சமீபத்தில் வெளியான தெலுங்கு பிளாக்பஸ்டரான மா நன்னா சூப்பர் ஹீரோ படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. லூசர்ஸ் சீரிஸ் மூலம் பாராட்டுக்களைக் குவித்த, அபிலாஷ் ரெட்டி கன்காரா இயக்கியுள்ள இந்த உணர்ச்சிகரமான குடும்ப டிராமா திரைப்படத்தில், சுதீர் பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனுபவமிக்க நடிகர்களான சாயாஜி ஷிண்டே, சாய் சந்த் மற்றும் ஆர்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். CAM Entertainment உடன் இணைந்து V Celluloids மற்றும் VR Global Media ஆகிய நிறுவனங்களின் கீழ் சுனில் பலுசு தயாரித்துள்ள “மா நன்னா சூப்பர் ஹீரோ”, தந்தை-மகன் உறவுகளின் சிக்கல்களை, நாம் நேசிப்பவர்களுக்காக நாம் செய்யும் தியாகங்கள் மற்றும் பெரும்பாலும் உறவுகளில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆராய்கிறது. திரையரங்குகளில் ரிலீஸைத் தவறவிட்டவர்களுக்கு, நவம்பர் 15 முதல் ZEE5 இல் இப்படம் பிரத்தியேகமாகக் கிடைக்கும், பார்வையாளர்கள் இந்த மனதைத் தொடும் திரைப்படத்தை தங்கள் வீட்டிலிருந்து அனுபவிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.
 
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/g6ywBY42-64 
 
“மா நன்னா சூப்பர் ஹீரோ” ஜானி (சுதீர் பாபு) எனும் ஒரு மெக்கானிக்கின் உணர்ச்சிகரமான கதையைச் சொல்கிறது, அவர் தனது வளர்ப்புத் தந்தை (சாயாஜி ஷிண்டே) விட்டுச் சென்ற பெரும் கடன்களை அடைக்க போராடுகிறார், ஒரு காலத்தில் பணக்காரர் இப்போது ஏழையாகப் பணமில்லாத சிக்கல்களை எதிர்கொள்கிறார். அவர் வாழ்வில் எதிர்பாராத திருப்பத்தில் அவரது வளர்ப்புத் தந்தை கைதாகிறார். அவரை விடுவிக்க அவருக்கு 1 கோடி தேவைப்படுகிறது. தன் வளர்ப்புத் தந்தையின் விடுதலைக்காகப் போராடும் ஜானி, அவரது உண்மையான தந்தையை (சாய் சந்த்) தேடி ஒரு பயணத்தைத் தொடங்குகிறார். ஜானி தனது வளர்ப்புத் தந்தையைக் காப்பாற்றுவது மற்றும் தனது சொந்த கடந்த காலத்தைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பது எனும் பயணத்தில் அன்பு, கடமை மற்றும் அடையாளம் என வாழ்வில் சிக்கல்களைச் சவால்களை எதிர்கொள்கிறார். “மா நன்னா சூப்பர் ஹீரோ” திரைப்படம் குடும்பத்திற்காக ஒருவர் செய்யும் தியாகங்களின் கதை. நம் குடும்பங்களின் உறவுச்சிக்கல்களை வெளிப்படுத்தும் கதை. ஜானி தன் வளர்ப்புத் தந்தையைக் காப்பாற்றுவாரா? தன் உண்மையான தந்தையைப் பற்றிய உண்மைகளை அறிவாரா? என்பதே திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
 
தயாரிப்பாளர் சுனில் பாலுசு கூறுகையில், “மா நன்னா சூப்பர் ஹீரோ ஒரு அழகான ஸ்லைஸ் ஆஃப் லைஃப் டிராமா, இது அப்பா-மகன் உறவின் உண்மைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமுடனும் நான் தனிப்பட்ட முறையில் இணைந்திருக்கிறேன், இப்படம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. இப்படத்திற்குத் திரையரங்குகளில் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது, மேலும் இப்போது ZEE5 இல் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களும் இதைப் போலவே உணருவார்கள் என்று நம்புகிறேன். இந்த தனித்துவமான மற்றும் உணர்ச்சிகரமான கதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளத் தகுதியானது, மேலும் ZEE5 உடனான இந்த ஒத்துழைப்பு அதை இன்னும் அதிகமான இதயங்களுக்கு எவ்வாறு கொண்டு வரும் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற பல அற்புதமான திரைப்படங்கள் வர வேண்டுமென ஆசைப்படுகின்றேன்
 
இயக்குனர் அபிலாஷ் ரெட்டி கன்காரா குறிப்பிடுகையில், “ZEE5 உடனான எனது பயணம் லூசருடன் தொடங்கியது, இது ஒரு அற்புதமான அனுபவம் மற்றும் மிகப்பெரிய வெற்றியாகும், இப்போது மா நன்னா சூப்பர் ஹீரோவுடன் மற்றொரு அற்புதமான மைல்கல்லை எட்டுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ‘தந்தையின் அன்பு மகனின் வலிமைக்கு அடித்தளம்’ என்று சொல்வது போல, இந்தப் படத்தில், சுதீர் பாபு அந்த இயக்கத்தை தன் நடிப்பில் காட்டி நம்மை உண்மையிலேயே மூச்சடைக்க வைக்கிறார். அவரது நடிப்பு மிகவும் அழுத்தமானது, உங்களால் உங்கள் கண்களை அவரிடமிருந்து எடுக்க முடியாது. சிறந்த நடிகர்கள் மற்றும் மறக்கமுடியாத நடிப்பு தான் ஒரு கதையைத் தனித்து நிற்கவும் பார்வையாளர்களிடம் எதிரொலிக்கவும் செய்கிறது என்று நான் நம்புகிறேன், சுதீரின் கதாபாத்திரம் அதற்கு ஒரு சான்றாகும். ZEE5 உடனான இந்தக் கூட்டணி தொடரும் வாய்ப்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் எதிர்காலத்தில் மேலும் பல தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
சுதீர் பாபு கூறுகையில், “மா நன்னா சூப்பர் ஹீரோ திரையரங்குகளில் பெற்ற அன்பும் பாராட்டும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு என்னைத் திக்கு முக்காட செய்தது. ஜானியாக நடிப்பது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது – காதல், கடமை மற்றும் உண்மையைத் தேடுதல் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிக்கொண்ட ஒரு பாத்திரம். இந்தக் கதைக்கு உயிர் கொடுப்பது ஒரு பாக்கியம், மேலும் பெரும் ஆதரவைத் தந்த ரசிகர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கின்றேன். ZEE5 இல் படம் திரையிடப்படும்போது அதே அன்பும் உற்சாகமும் தொடரும் என்றும், பார்வையாளர்கள் ஜானி மற்றும் அவரது உறவுகளின் இதயப்பூர்வமான பயணத்துடன் இணைவார்கள் என்றும் நான் நம்புகிறேன். உலகெங்கும் உள்ள பார்வையாளர்கள் இந்த கதையை அனுபவிக்கவுள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
 
தெலுங்கு பிளாக்பஸ்டரான ‘மா நன்னா சூப்பர் ஹீரோ’ படத்தைப் பார்வையாளர்கள் ZEE5 இல் பிரத்தியேகமாக நவம்பர் 15 முதல் பார்க்கலாம்!
 
ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
 
 
மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/