Take a fresh look at your lifestyle.

Minmini Movie Review

29

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 9 ல் வெளியாகவுள்ள படம் ‘மின்மினி’

கதை

பாரி விளையாட்டில் கெட்டிப்பையன். பள்ளியில் கட் அடித்தாலும் தவறு செய்தாலும் மன்னித்துவிடுவார்கள் பள்ளி நிர்வாகம். சபரி என்ற மாணவன் இந்த பள்ளியில் சேர்கிறான். பாரி சபரியை அடிக்கடி டார்ச்சர் செய்வான். பின் இருவரும் நண்பர்களாகின்றனர். பள்ளியில் டூர் செல்லும்போது ஆக்ஸிடடென்ட்டில் பாரி வண்டியில் உள்ள எல்லோரையும் காப்பாற்றிவிட்டு தன் நண்பன் சபரியை காப்பாற்றி வெளியே வரும்போது தலையில் அடிபட பாரி இறந்துவிடுகிறான். சபரிக்கு நண்பனின் இறப்பு வேதனையடைய வைக்கிறது. பாரி இறந்தபோது அவனது உறுப்பு வேறொறு மாணவியின் உயிரை காப்பாற்றுகிறது. அந்த மாணவி பாரி படிக்கும் பள்ளியில் சேருகிறாள் பாரியை பற்றி தெரிந்து கொள்ள. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை படத்தின் மீதிக்கதை

முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகியோர் நடித்துள்ளார்கள்மூவரின் நடிப்பும் சூப்பர். கதிஜா ரஹ்மான் இசை அருமை. படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான். அவருடைய விஷுவல்ஸ் வேற லெவல்” மிகவும் அருமை.

பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.
இப்படத்தில் நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து அவர்களையே இளம் வயது பருவத்தில் நடிக்க வைத்து படமாக்கியுள்ளது சிறப்பு.

எல்லோரும் ரசிக்கும்படியான பீல்குட் மூவியாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.