டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!
டெட்பூல் & வால்வரின் என்ற இரண்டு சூப்பர் ஹீரோக்கள் மிகப்பெரிய ஆக்ஷன் எண்டர்டெயினருக்காக திரையில் இணைவதை பார்க்க இந்தியா சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங்கை இன்று முதல் மார்வெல் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் டெட்பூல் & வால்வரினை கொண்டாட அனைத்து மார்வெல் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
மார்வெல் ஸ்டுடியோவின் ’டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.